\
தேவர் ஜெயந்தி கொண்டாட்டத்தில் பெண் போலீசாரிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட இருவர் கைது

தேவர் ஜெயந்தி கொண்டாட்டத்தில் பெண் போலீசாரிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட இருவர் கைது

தேவர் ஜெயந்தி கொண்டாட்டத்தில் பெண் போலீசாரிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட இருவர் கைது
Published on

தேவர் ஜெயந்தியையொட்டி சென்னை நந்தனத்தில் தேவர் சிலைக்கு முக்கிய தலைவர்கள் நேற்று மரியாதை செலுத்தினர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர்களிடம் 2 பேர் அநாகரிகமாக நடந்து கொண்ட சம்பவம் நிகழ்ந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கிருந்த போலீசார் அந்த 2 பேரை கைது செய்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

அவர்கள் சென்னை ரெட்டேரியை சேர்ந்த விஜயாபண்டி, தர்மேந்திரன் என்பது தெரிந்தது. 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேனாம்பேட்டை போலீசார் கைது செய்தனர். கைதான விஜயபாண்டி மீது சோழவரம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு, கஞ்சா வழக்கு உள்ளது. கைதான 2 பேர் மீது 294(பி)- ஆபாசமாக திட்டுதல், 353- அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், மற்றும் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைதான 2 பேரையும் தேனாம்பேட்டை போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் செங்கல்பட்டு கிளைச்சிறையில் அடைத்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com