ஆட்டோ ஓட்டுநர் போக்சோவில் கைது
ஆட்டோ ஓட்டுநர் போக்சோவில் கைதுpt desk

தூத்துக்குடி | சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஆட்டோ ஓட்டுநர் போக்சோவில் கைது

திருச்செந்தூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
Published on

செய்தியாளர்: பே.சுடலைமணி செல்வன்

திருச்செந்தூர் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்தவர் அரிச்சந்திரன் (43). ஆட்டோ டிரைவரான இவர், கடந்த 24ந் தேதி உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி அலறிய நிலையில், சிறுமியை மிரட்டிவிட்டு, தப்பியோடி உள்ளார்.

Arrested
Arrestedpt desk
ஆட்டோ ஓட்டுநர் போக்சோவில் கைது
மருத்துவ சான்றிதழ் வழங்கிய மருத்துவருக்கு மிரட்டல் | பெண் காவல் ஆய்வாளர் மீது புகார் - நடந்தது என்ன?

இது குறித்து அந்த சிறுமி பெற்றோரிடம், கூறியதை அடுத்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சிறுமியுடன் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், ஆட்டோ ஓட்டுநரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com