600 ஆண்டுகள் பழமையான ஐம்பொன் சிலையை கடத்த முயற்சி: 4 பேர் கைது

600 ஆண்டுகள் பழமையான ஐம்பொன் சிலையை கடத்த முயற்சி: 4 பேர் கைது
600 ஆண்டுகள் பழமையான ஐம்பொன் சிலையை கடத்த முயற்சி: 4 பேர் கைது

காஞ்சிபுரம் அருகே 600 ஆண்டுகள் பழமையான ஐம்பொன் சிலையை கடத்த முயன்ற 4 பேரை, சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆரியபெரும்பாக்கத்தில் ஒரு காரில் இருந்து மற்றொரு காருக்கு ஐம்பொன் சிலை மாற்றப்படும்போது, ஐஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் கடத்தல் கும்பலை கையும் களவுமாக மடக்கி பிடித்துள்ளனர். அவர்களிடம் இருந்து 2 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 600 ஆண்டுகள் பழமையான சுந்தரமூர்த்தி நாயனார் சிலை பறிமுதல் செய்யப்பட்டது.

கடத்தல் சம்பவம் தொடர்பாக, காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக், தட்சிணாமூர்த்தி, சேகர் மற்றும் திருவண்ணாமலையை சேர்ந்த மகேந்திரன் கைது செய்யப்பட்டனர். இவர்களில் கார்த்திக், தட்சிணாமூர்த்தி ஆகிய இருவரும் பொறியாளர்கள் ‌என்பது தெரியவந்துள்ளது. கைதான 4 பேரும் கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களிடம் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com