பச்சிளங்குழந்தைகள் விற்ற வழக்கு: அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு 16ம் தேதி வரை நீதிமன்றக் காவல்

பச்சிளங்குழந்தைகள் விற்ற வழக்கு: அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு 16ம் தேதி வரை நீதிமன்றக் காவல்

பச்சிளங்குழந்தைகள் விற்ற வழக்கு: அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு 16ம் தேதி வரை நீதிமன்றக் காவல்
Published on

பணத்திற்காக குழந்தைகளை விற்ற வழக்கில் கைதான இதயம் அறக்கட்டளை தலைவர் சிவகுமார் மற்றும் நிர்வாகி மதர்சா ஆகியோர்  நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மதுரை ரிசர்வ் லைன் பகுதியில் செயல்பட்டுவந்த இதயம் அறக்கட்டளையின் காப்பகத்தில் பல குழந்தைகள் பணத்திற்காக விற்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்த வழக்கில் ஏற்கனவே 7 பேரை கைது செய்த காவல் துறையினர், அறக்கட்டளையின் தலைவர் சிவக்குமார், நிர்வாகி மதர்சாவை தேடி வந்தனர். தேனி மாவட்டம் போடியில் இருந்து கேரளா தப்ப முயன்றபோது அவர்களை கைது செய்த காவல்துறையினர், மதுரை கூடுதல் விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அவர்களுக்கு 16 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் வழங்கப்பட்ட நிலையில், மருத்துவ பரிசோதனைக்குப் பின் சிறையில் அடைக்கப்பட்டனர். குழந்தைகளை விற்றது தொடர்பாக இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com