பொதுக் கழிப்பிடத்தை உபயோகிக்க சென்ற பெண்களை வீடியோ எடுத்து வந்த நபர் கைது!

பொதுக் கழிப்பிடத்தை உபயோகிக்க சென்ற பெண்களை வீடியோ எடுத்து வந்த நபர் கைது!

பொதுக் கழிப்பிடத்தை உபயோகிக்க சென்ற பெண்களை வீடியோ எடுத்து வந்த நபர் கைது!
Published on

எடமலைப்பட்டி புதூர் அருகே பொதுக் கழிப்பிட ஜன்னல் வழியாக பெண்களை செல்போனில் ஆபாச வீடியோ எடுத்ததாக இளைஞர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி எடமலைப்பட்டி புதூர் அந்தோனியார் கோயில் தெருவைச் சேர்ந்த காளிதாஸ் என்பவரது மகன் மணிகண்டன் (27). இவர் கோவில் திருவிழாக்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் நடத்தப்படும், ஆடல் பாடல் நடன நிகழ்ச்சிகளில் நடனமாடி வருகிறார்.

இந்நிலையில், இவரது மாமியார் வீடு, எடமலைப்பட்டி புதூர் அந்தோணியார் கோவில் தெருவில் உள்ள பொதுக் கழிப்பிடத்தின் அருகே அமைந்துள்ளது. மாமியார் வீட்டுக்கு வரும் போதெல்லாம் வீட்டின் அருகேயுள்ள சந்து பகுதியில் நின்று பொதுக் கழிப்பிடத்திற்கு வரும் பெண்களை அவர்களுக்கு தெரியாமல் கழிப்பறையின் சன்னல் வழியாக தனது செல்போனில் ஆபாச வீடியோ படம் எடுத்து வந்துள்ளார்.

இதை திருச்சி எடமலைப்பட்டிபுதூர் வடக்கு மேட்டுத் தெருவைச் சேர்ந்த செல்வம் என்பவரது மகன் மணிகண்டன் (28), எதேச்சையாக பார்த்து, செல்போனை பறித்து ஆய்வு செய்துள்ளார். அதில், பல நாட்கள் ரகசியமாக எடுக்கப்பட்ட ஆபாச வீடியோக்கள் பதிவாகியிருந்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து செல்போனை பறித்த மணிகண்டன் கொடுத்த புகாரின் அடிப்படையில், ஆபாச படம் எடுத்த மணிகண்டனை, திருச்சி எடமலைப்பட்டி புதூர் காவல்நிலைய போலீசார் கைது செய்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com