Police stationpt desk
குற்றம்
திருச்சி | கஞ்சா விற்பனை செய்ததாக இளைஞர் கைது – 1 கிலோ கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்
திருச்சியில் போலீசாரின் சோதனையில் சிக்கிய ஒரு கிலோ கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் பறிமுதல் - ஒருவரை கைது செய்துள்ள போலீசார், தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர்.
செய்தியாளர்: பிருந்தா
திருச்சி, உறையூர் பகுதியில் சிலர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது உறையூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த மணிகண்டன் (25) என்ற இளைஞரை கைது செய்தனர்.
arrestpt desk
இதையடுத்து அவரிடமிருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை கைப்பற்றிய போலீசார், தப்பியோடிய அவரது கூட்டாளிகள் நாகராஜ் மற்றும் ஜிஜு ஆகிய இரண்டு இளைஞர்களை தேடி வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட மணிகண்டனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் உறையூர் காவல்துறையினர் அவர் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.