திருச்சி: அண்ணன் தம்பிக்கு ஏற்பட்ட தகராறு – மது போதையில் அண்ணனால் தம்பிக்கு நேர்ந்த விபரீதம்

திருவெறும்பூர் அருகே குடிபோதையில் தம்பியை கம்பியால் அடித்துக் கொன்ற அண்ணனை துவாக்குடி போலீசார் கைது செய்துள்ளனர்.
Death
Deathpt desk

செய்தியாளர்: சுரேஷ்

திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி எம்டி சாலையை சேர்ந்தவர் அர்த்தநாரி. இவருக்கு கோவிந்தராஜ் (52), குமரன் (43) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களில், கோவிந்தராஜ் துவாக்குடியில் உள்ள தனியார் கம்பெனியில் வெல்டராக வேலை பார்த்து வந்த நிலையில், குமரன் துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில் டைலராக வேலை பார்த்து வந்துள்ளார்.

அர்த்தநாரியின் இல்லம்
அர்த்தநாரியின் இல்லம்pt desk

சகோதரர்கள் இருவருக்கும் திருமணமாகாததால், இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு சாப்பிடும் போது, இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கோவிந்தராஜ், குமரனை இரும்பு ராடால் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த குமரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Death
அசாம்: மனைவி இறந்த துக்கம் தாளாமல் உள்துறை செயலாளர் எடுத்த விபரீத முடிவு!

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற துவாக்குடி போலீஸார், குமரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கோவிந்தராஜை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com