தொடரும் கருமுட்டை விவகாரம் - திருச்சி மருத்துவமனைக்கும் சம்மன்

தொடரும் கருமுட்டை விவகாரம் - திருச்சி மருத்துவமனைக்கும் சம்மன்
தொடரும் கருமுட்டை விவகாரம் - திருச்சி மருத்துவமனைக்கும் சம்மன்
Published on

கருமுட்டை விவகாரத்தில் ஏற்கெனவே 6 மருத்துவமனைகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில் புதிதாக திருச்சி மருத்துவமனைக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்த வழக்கில் தாய் இந்திராணி, 2வது கணவர் சையத்அலி, இடைத்தரகர் மாலதி, ஆதாரில் சிறுமியின் வயதை உயர்த்து காட்டிய ஜான் என மொத்தம் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து ஈரோடு காப்பகத்தில் தங்க வைகப்பட்ட சிறுமியிடம் தமிழக அரசின் உயர்மட்ட மருத்துவ குழுவினர் விசாரணை நடத்தினர். சிறுமி அளித்த வாக்குமூலத்தின் படி முதற்கட்டமாக ஈரோடு, பெருந்துறை, சேலம் மற்றும் ஒசூர் ஆகிய தனியார் மருத்துவமனைகளில் உயர்மட்ட மருத்துக்குழுவினர் ஆய்வு செய்து மருத்துவமனை பதிவேடுகள் மற்றும் ஆவணங்களை சரிபார்த்தனர்.

இதையடுத்து உயர்மட்ட குழு மருத்துவர்கள் அந்த ஆய்வறிக்கையை ஈரோடு தெற்கு காவல்நிலையத்தில் சமர்ப்பித்தனர். அதன்அடிப்படையில் ஏடிஎஸ்பி கனகேஷ்வரி தலைமையிலான தனிப்படை ஈரோடு, பெருந்துறை, சேலம், ஓசூர், கேரளா திருவணந்தபுரம், ஆந்திரா திருப்பதி மற்றும் திருச்சி என 7 தனியார் மருத்துவமனைகளுக்கு சம்மன் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளனர். இதில் ஈரோடு, பெருந்துறை, ஓசூர் தனியார் மருத்துவமனை மனைகளில் விசராணை நடைபெற்றது. போலீசாரின் தீவிர விசாரணையில் திருச்சியிலும் கருமுட்டை விவகாரம் நீடிக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com