\
துணை வட்டாட்சியர் கைது
துணை வட்டாட்சியர் கைது pt desk

திருச்சி: பட்டா பெயர் மாற்றம் செய்துதர ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை வட்டாட்சியர் கைது

திருச்சியில் பட்டாவில் பெயர்மாற்றம் செய்து தருவதற்கு 20,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய துணை வட்டாட்சியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Published on

லால்குடி வட்டம் அன்பில் கிராமம் மங்கம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் மோகன். இவர் தனது நிலத்திற்கான பட்டாவில் தவறாக இருந்த பெயரை மாற்ற வேண்டி கடந்த மார்ச் மாதம் லால்குடி வருவாய் வட்டாட்சியரிடம் விண்ணப்பித்துள்ளார்.

பெயர் மாற்றம் செய்ய 20 ஆயிரம் ரூபாயை துணை வட்டாட்சியர் லஞ்சமாக கேட்ட நிலையில் அது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையில் மோகன் புகார் செய்தார்.

Arrested
Arrestedfile

இதனையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறையின் அறிவுறுத்தலின் பேரில், மோகன், ரவிக்குமாரின் அலுவலகத்தில் வைத்து அவரிடம் இருபதாயிரம் ரூபாயை அளித்துள்ளார். அப்போது, அருகில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் காவல்துறையினர் ரவிக்குமாரை கையும்-களவுமாக கைது செய்தனர்.

துணை வட்டாட்சியர் கைது
தேனி: குழந்தைகளோடு கழிவுநீரில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் - காரணம் என்ன?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com