வீட்டின் வெளியே தூங்கிய தம்பதி: கொள்ளையால் நேர்ந்த துயரம்!
திருச்சியில் வீட்டின் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை கொலை செய்துவிட்டு 20 சவரன் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை அடுத்த பெரகம்பியைச் சேர்ந்த ரமேஷ் மற்றும் அவரது மனைவி லதா தம்பதியினர் நேற்றிரவு தோட்டத்து வீட்டின் வெளியே படுத்து தூங்கிக் கொண்டிருந்திருக்கின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்த லதாவையும், உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ரமேஷையும் கண்ட மக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்திருக்கின்றனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், லதாவின் சடலத்தை மீட்டதோடு, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ரமேஷை
மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுதொடர்பாக விசாரித்ததில், மர்ம கும்பல் தம்பதியை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கிவிட்டு வீட்டில் இருந்த நகை மற்றும் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றது தெரியவந்ததுள்ளது.