\
சிவசங்கர் பாபா வழக்கின் விசாரணை அதிகாரி இடமாற்றம்

சிவசங்கர் பாபா வழக்கின் விசாரணை அதிகாரி இடமாற்றம்

சிவசங்கர் பாபா வழக்கின் விசாரணை அதிகாரி இடமாற்றம்
Published on

சிவசங்கர் பாபா மீதான இரண்டாவது போக்சோ வழக்கின் குற்றப்பத்திரிகை இன்னும் சில நாள்களில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் விசாரணை அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான சிவசங்கர் பாபா மீது 3 போக்சோ வழக்குகள் பதியப்பட்டுள்ளன. ஒரு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்ட நிலையில், இரண்டாவது வழக்கின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவிருந்தது. இவ்வாறான சூழலில் வழக்கின் விசாரணை அதிகாரியான சிபிசிஐடி டிஎஸ்பி குணவர்மன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மாநகராட்சியின் விஜிலென்ஸ் தடுப்பு பிரிவு டிஎஸ்பியாக குணவர்மன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிவசங்கர் பாபா மீதான 2 ஆவது வழக்கின் குற்றப்பத்திரிகை இன்னும் சில நாட்களில் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் 3ஆவது போக்சோ வழக்கின் குற்றப்பத்திரிகையை தயார் செய்யும் பணியிலும் காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com