குற்றம்
தக்காளி மூலம் பெரும் வருவாயை ஈட்டிய விவசாயி, பணத்துக்காக கொலை?
தக்காளியின் விலை உயர்வினால் 30 லட்சம் ரூபாய் வரை லாபம் ஈட்டியதாக சொல்லப்படும் விவசாயியொருவர், அப்பணத்துக்காகவே கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனது தோட்டத்தில் தக்காளி பயிரிட்டு அறுவடை செய்து வந்த ஆந்திராவை சேர்ந்த விவசாயி ராஜசேகர ரெட்டி என்பவர், தற்போது நிலவும் தக்காளியின் விலை உயர்வினால் சமீபத்தில் 30 லட்சம் ரூபாய் வரை லாபம் ஈட்டியதாகக் கூறப்படுகிறது.

கொலை செய்யப்பட்ட விவசாயி ராஜசேகர ரெட்டி
இவர் தன் தக்காளி தோட்டத்திலேயே தங்கியிருந்த நிலையில், கை, கால்களை கட்டி கொலை செய்யப்பட்டிருந்துள்ளார். தக்காளி மூலம் இவர் ஈட்டிய லாபமே இவரது கொலைக்கான காரணமாக இருக்குமென சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறது.