\
பறக்கும்படை வாகன சோதனையில் சிக்கிய புகையிலை பொருள்கள்: பாஜக நிர்வாகி கைது

பறக்கும்படை வாகன சோதனையில் சிக்கிய புகையிலை பொருள்கள்: பாஜக நிர்வாகி கைது

பறக்கும்படை வாகன சோதனையில் சிக்கிய புகையிலை பொருள்கள்: பாஜக நிர்வாகி கைது
Published on

திருச்சி மாவட்டம் துறையூரில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் சட்ட விரோதமாக புகையிலை பொருள்கள் எடுத்துச் சென்றதாக பாஜக நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.

துறையூர் அருகே ஒ.கிருஷ்ணாபுரம் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் பெரியசாமி என்பவரின் மகன் செந்தில்குமார் (38). திருச்சி புறநகர் மாவட்ட பாஜக பொதுச்செயலராக உள்ள இவர், பெட்டிக்கடை வைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று துறையூர் பாலக்கரையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக டூவீலரில் சென்ற செந்தில்குமாரை மறித்து சோதனையிட்டனர். அப்போது அவர் அரசு தடைசெய்துள்ள 3 கிலோ எடையுள்ள ஹான்ஸ் பாக்கெட்டுகள், 860 கிராம் பான் மசாலா மற்றும் 450 கிராம் புகையிலை பாக்கெட்டுகளையும் சட்ட விரோதாமாக எடுத்துச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து புகையிலை பொருள்களை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் செந்தில் குமாரை துறையூர் போலீசில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக துறையூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து செந்தில் குமாரை கைது செய்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com