குற்றம்
அரைகுறை ஆடையுடன் திரிந்த மனநலம் பாதித்தவருக்கு புத்தாடை அணிவித்த காவலர்கள்
அரைகுறை ஆடையுடன் திரிந்த மனநலம் பாதித்தவருக்கு புத்தாடை அணிவித்த காவலர்கள்
மன்னார்குடியில் மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு, காவலர்கள் புதியஉடை மாற்றிவிடும் வீடியோ வைரலாகி வருகிறது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ரோந்து காவலராக பணிபுரியும் பிரகாஷ் மற்றும் கார்த்திகேயன் இருவரும் ரோந்து பணியில் இருந்தபோது மன்னார்குடி பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளனர். அங்கு மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் போதிய உடைகள் இன்றி ஒற்றை கந்தல் துணி மட்டுமே அணிந்திருந்தார்.
இதைக் கண்ட காவலர்கள் இருவரும், புது ஆடைகளை வாங்கி வந்து மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு அணிந்துள்ளனர். இது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. இதனை பார்த்த பொதுமக்கள் போலீசார் இருவரையும் பாராட்டி வருகின்றனர். மாவட்ட கண்காணிப்பாளர் துரை காவலர்கள் இருவரையும் நேரில் அழைத்து பாராட்டி உள்ளார்.