\
கன்னியாகுமரி: வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் கைது

கன்னியாகுமரி: வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் கைது

கன்னியாகுமரி: வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் கைது
Published on

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் அருகே 11-வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் பகுதியை சேர்ந்தவர் பால் மகேந்திரன் (38), இவருக்கு திருமணம் ஆகாத நிலையில், தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் சுமை தூக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவருடன் அதே பகுதியை சேர்ந்த சூசை என்பவரும் சுமை தூக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் நேற்று பால் மகேந்திரன், சூசையை பார்க்க அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார் அப்போது சூசை வீட்டில் இல்லாத நிலையில் தனிமையில் இருந்த அவரது மகள் 11-வயதே ஆன சிறுமியிடம் பால் மகேந்திரன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதையடுத்து சிறுமி சத்தம் போடவே அவர் அங்கிருந்து தப்பியுள்ளார்.

சீண்டலில் சிறுமியின் உடலில் லேசான காயங்கள் ஏற்பட்ட நிலையில் இதுகுறித்து சூசை குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு பால் மகேந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com