குற்றம்
மெரினாவில் துப்பாக்கியுடன் சுற்றிய 3 இளைஞர்கள் கைது
மெரினாவில் துப்பாக்கியுடன் சுற்றிய 3 இளைஞர்கள் கைது
சென்னை மெரினாவில் துப்பாக்கியுடன் சுற்றிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மெரினா கடற்கரை அருகே நேற்று நள்ளிரவு தனிப்படை போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த 3 பேரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் சோதனை மேற்கொண்டபோது, மூன்று பேரிடமும் கைத்துப்பாக்கி மற்றும் கத்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த 3 பேரையும் விசாரித்ததில், அவர்கள் திருவல்லிக்கேணி மற்றும் சேப்பாக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் நேற்றிரவு நொச்சிநகர் பகுதியிலுள்ள ஒரு ரவுடி கும்பலில் உள்ள ஒருவரை மிரட்டுவதற்காகச் சென்றது தெரியவந்தது. அதையடுத்து மூவரும் கைது செய்யப்பட்ட நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.