திருவேற்காடு: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த உதவி தலைமை ஆசிரியர் கைது

திருவேற்காடு: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த உதவி தலைமை ஆசிரியர் கைது

திருவேற்காடு: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த உதவி தலைமை ஆசிரியர் கைது
Published on

திருவேற்காட்டில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த உதவி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவேற்காட்டில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் ராஜா முத்தெழில்(49). இவரது வகுப்பில் பயிலும் மாணவிகளிடம் கையை பிடித்து போர்டில் எழுத வைப்பதும், மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு செய்ததாகவும் மாணவிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் போரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் பேரில் போரூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து ராஜா முத்தெழிலை பிடித்து விசாரித்த போது மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து உதவி தலைமை ஆசிரியர் ராஜா முத்தெழிலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com