கேக் வெட்டி நண்பர்களுடன் பிறந்த நாள் விழா கொண்டாடிய இளைஞர் - மதுபோதையில் நடந்த அதிர்ச்சி

கேக் வெட்டி நண்பர்களுடன் பிறந்த நாள் விழா கொண்டாடிய இளைஞர் - மதுபோதையில் நடந்த அதிர்ச்சி

கேக் வெட்டி நண்பர்களுடன் பிறந்த நாள் விழா கொண்டாடிய இளைஞர் - மதுபோதையில் நடந்த அதிர்ச்சி
Published on

திருவள்ளூரில் பிறந்தநாள் விழா கொண்டாடிய இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நண்பர்களுடன் மது அருந்தியபோது நடந்த சம்பவத்தில், 2 பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த அலமாதி கிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (21). இவர் பிளம்பிங் மற்றும் எலக்ட்ரிக்கல் பணி செய்து வந்துள்ளார். இந்நிலையில், தமது பிறந்த நாளில் நண்பர்களுக்கு, இளைஞர் மாரிமுத்து மது விருந்து வைத்துள்ளார். அலமாதி ஏரியில் மாரிமுத்து, தமது நண்பர்கள் ராமமூர்த்தி, லோகேஸ்வரன் ஆகியோருடன் இணைந்து கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியப் பின்னர், அனைவரும் மது அருந்தியுள்ளனர்.

அப்போது திடீரென நண்பர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு ராமமூர்த்தி, மாரிமுத்துவை கன்னத்தில் அறைந்துள்ளார். இதில் மாரிமுத்து மயங்கி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ராமமூர்த்தி, லோகேஸ்வரன் ஆகிய இருவரும் மாரிமுத்துவை சிகிச்சைக்காக பாடியநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு மாரிமுத்துவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சோழவரம் போலீசார், சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுற்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சோழவரம் போலீசார், மாரிமுத்துவின் நண்பர்கள் ராமமூர்த்தி, லோகேஸ்வரன் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய இளைஞர் மாரிமுத்து, பிறந்தாளிலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com