3-வது மனைவியுடன் சேர்ந்து 2-வது மனைவிக்கு மிரட்டல்... திருவள்ளூர் பாஜக துணைத்தலைவர் கைது!

திருவள்ளூர் மாவட்ட பாஜக பிரமுகர் மூன்றாவது திருமணம் செய்ததோடு, இரண்டாவது மனைவிக்குக் கொலை மிரட்டல் விடுத்த புகாரில் கைதுசெய்யப்பட்டார்.

ஆவடியின் கோவர்த்தனகிரியை சேர்ந்தவர், திருவள்ளூர் மாவட்ட பாஜக துணைத்தலைவர் மூர்த்தி. இவர் நளினி என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் ஆவடியைச் சேர்ந்த தேவிகா என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. தேவிகா, விவாகரத்தாகி பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வந்த பெண்.

இந்நிலையில் மூர்த்தி, தனக்குத் திருமணம் ஆனதை மறைத்து தேவிக்காவுடன் பழகி அவரை இரண்டாவதாகத் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இது தெரிந்தும், மூர்த்தியின் முதல் மனைவி நளினி அவரை பிரியாமல் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், பிரேமா என்ற பெண்ணுடன் மூர்த்திக்குத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நளினி 2018-ல் உயிரை மாய்த்துக்கொண்டார்.

இவ்வளவு பிரச்னைகளுக்கு இடையேவும் தற்போது, ஜென்சி என்ற பெண்ணை மூர்த்தி மூன்றாவதாகத் திருமணம் செய்துகொண்டதுடன், அவருடன் சேர்ந்து இரண்டாவது மனைவி தேவிகாவையும் மிரட்டியுள்ளார். இதையடுத்து, தேவிகா கொடுத்த புகாரில் மூர்த்தி கைது செய்யப்பட்டார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com