14 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது
14 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைதுpt desk

திருவள்ளூர் | ஒடிசாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 14 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது

ஒடிசாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 14 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினர், கோவையைச் சேர்ந்த இருவரை கைது செய்தனர்.
Published on

செய்தியாளர்: எழில்

ஒடிசாவில் இருந்து சென்னை வழியாக கோவைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் உதவி ஆய்வாளர் ஜெகநாதனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து செங்குன்றம் சோதனைச்சாவடி அருகே மாறுவேடத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த பேருந்தை நிறுத்தி சோதனையிட்டனர்.

Arrested
Arrestedpt desk

அப்போது அதில் பண்டல் பண்டலாக கஞ்சா இருப்பது தெரியவந்தது. அவற்றை கடத்தி வந்த 2 பேரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். கஞ்சா கடத்தியவர்கள் கோவையை சேர்ந்த டேவிட்ராஜ் (26) மற்றும் சந்தீப் (23) என்பதும், அவர்கள் இருவரும் ஓடிஷாவில் இருந்து கஞ்சாவை ரயில் மூலம் கடத்தி வந்தது தெரியவந்தது.

14 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது
ஒரு நாளைக்கு எத்தனை முறை மலம் கழிப்பது ஆரோக்கியம்?

இதனையடுத்து 14 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com