\
திருவள்ளூர்: பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி பொருட்கள் பேக் செய்து விற்பனை!

திருவள்ளூர்: பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி பொருட்கள் பேக் செய்து விற்பனை!

திருவள்ளூர்: பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி பொருட்கள் பேக் செய்து விற்பனை!
Published on

பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி வாஷிங் பவுடர் மற்றும் சோப்பு திரவம் தயாரித்து அவற்றை தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களுக்கு விற்பனை செய்த கும்பலை சென்னை அருகே போலீசார் கைது செய்துள்ளனர். 500 மூட்டை சோப்பு பவுடர், 50 கேன் சோப்பு திரவம், 6 பேக்கிங் இயந்திரங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த எடப்பாளையம் சுற்று வட்டாரத்தில் உள்ள கிடங்குகளில் பிரபல நிறவனத்தின் பெயரில் போலி வாஷிங் பவுடர் தயாரிக்கப்பட்டு வருவதாக சோழவரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று அங்குள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது பிரபல நிறுவனத்தின் பெயரில் போலியாக வாஷிங் பவுடர் மற்றும் சோப்பு திரவம் தயாரித்து வந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து 500 மூட்டை சோப்பு பவுடர், 50 கேன் சோப்பு திரவம், 6 பேக்கிங் இயந்திரங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் போலி வாஷிங் பவுடர் தயாரித்து வந்த மேனேஜர் முகமது இப்ராஹிம், சூப்பர்வைசர் ரவி மற்றும் வடமாநில தொழிலாளர்கள் உள்ளிட்ட 15 பேரை கைது செய்து சோழவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com