போதையில் திடீரென ஆட்டோவை திருப்பியதால் விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெண்

போதையில் திடீரென ஆட்டோவை திருப்பியதால் விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெண்

போதையில் திடீரென ஆட்டோவை திருப்பியதால் விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெண்
Published on

தெலங்கானா மாநிலத்தில் மதுபோதையில் ஆட்டோவை இயக்கியதால், திடீரென கவிழ்ந்து, எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், இளம்பெண் நூலிழையில் உயிர்தப்பினார்.

கொமரம் பீம் மாவட்டத்தில் பாலத்தின் மேல் சென்ற ஆட்டோவில், உள்ளே அமராமல் தொங்கியபடி சென்ற நபர், அதனை அங்கும் இங்கும் அசைத்த நிலையில், ஆட்டோ கவிழ்ந்து, எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. 

இதில் இருசக்கர வாகனத்தில் வந்த இளம்பெண் ஹெல்மெட் அணிந்திருந்ததால், சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். மேலும் ஆட்டோவில் இருந்தவர்களும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இந்தக் காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. மதுபோதையில் ஆட்டோவை இயக்கியதால் விபத்து நேரிட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com