திருத்தணி: கேமராவை டம்ளர் வைத்து மூடிவிட்டு டாஸ்மாக்கை துளையிட்ட கொள்ளையர்கள்!

திருத்தணி: கேமராவை டம்ளர் வைத்து மூடிவிட்டு டாஸ்மாக்கை துளையிட்ட கொள்ளையர்கள்!

திருத்தணி: கேமராவை டம்ளர் வைத்து மூடிவிட்டு டாஸ்மாக்கை துளையிட்ட கொள்ளையர்கள்!
Published on

திருத்தணி அடுத்த மாமண்டூரில் உள்ள டாஸ்மாக் கடையின் சுவற்றை துளையிட்டு விலையுயர்ந்த மதுபான பாட்டில்களை திருடிச்சென்ற சம்பவம் நடந்துள்ளது. கடைக்கு வெளியே இருந்த கண்காணிப்பு கேமராவை மூடியும், கடைக்குள் இருந்த கண்காணிப்பு கேமராவை உடைத்தும் கொள்ளையர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த மாமண்டூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் கடையில் பின்புற சுவற்றை துளையிட்டு உள்ளே புகுந்த மர்ம நபர்கள், விலையுயர்ந்த 96 மதுபாட்டில்களை திருடி சென்றுள்ளனர். திருடச் செல்வதற்கு முன் வெளியில் இருந்த கண்காணிப்பு கேமராவை குடிநீர் டம்ளர் மூலம் மூடிவிட்டு உள்ளே சென்ற மர்மநபர்கள், உள்ளே இருந்த கண்காணிப்பு கேமராவை உடைத்துவிட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுபோக சுவரின் ஓரம் இருந்த 100-க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை தள்ளி உடைத்தும் சேதப்படுத்தி உள்ளனர்.

இந்நிலையில் நள்ளிரவில் ரோந்து பணியில் ஈடுபட்ட கனகம்மா சத்திரம் போலீசார் இந்த டாஸ்மாக் கடையை ஆய்வு செய்தபோது சுவற்றில் துளையிட்டு மர்ம நபர்கள் கொள்ளையடித்தது தெரியவந்தது. தொடர்ந்து அதே டாஸ்மாக் கடையில் இரண்டு முறை நடைபெற்ற கொள்ளை சம்பவம் குறித்து கனகம்மா சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com