வங்கதேசத்தைச் சேர்ந்த இருவர் கைது
வங்கதேசத்தைச் சேர்ந்த இருவர் கைதுpt desk

திருப்பூர் | உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த இருவர் கைது

திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்
Published on

செய்தியாளர்: ஹாலித் ராஜா

திருப்பூர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மன்னரை பகுதியில் வடக்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படி நின்றிருந்த இரண்டு பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனார். ஆப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

Arrested
Arrestedpt desk

விசாரணையில் அவர்கள் இருவரும் வங்காளதேச நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும் முறையான ஆவணங்கள் இன்றி இந்தியாவிற்கு வந்து கடந்த 9 ஆண்டுகளாக திருப்பூரில் தங்கி பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்தது தெரியவந்தது.

வங்கதேசத்தைச் சேர்ந்த இருவர் கைது
கிருஷ்ணகிரி | வாங்கிய கடனை திரும்பக் கேட்டு கார் டிரைவர் கடத்தல் - 5 பேர் கொண்ட கும்பல் கைது

இதையடுத்து போலீசார் உரிய ஆவணங்கள் இன்றி திருப்பூரில் தங்கியிருந்த அப்துல் உசேன் (45) மற்றும் இப்ராஹிம் (33) ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com