Police SI Suspendedpt desk
குற்றம்
திருப்பூர்: போலீஸ் வேலை வாங்கித் தருவதாக ரூ.25 லட்சம் மோசடி – காவல் உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்
திருப்பூரில் போலீஸ் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.25 லட்சம் மோசடி செய்த உதவி ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
செய்தியாளர்: சுரேஷ்குமார்
திருப்பூர் மாநகர் நல்லூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றும் முரளிதரன் (52) மற்றும் ஜெயராஜ், கிருஷ்ணராஜ் ஆகிய மூவரும் சேர்ந்து பொள்ளாச்சியை சேர்ந்த பிரசாந்த் என்பவரிடம் போலீஸ் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.25 லட்சம் பணத்தைப் பெற்று மோசடி செய்துள்ளனர்.
suspendfile
இது குறித்து பிரசாந்த் கொடுத்த புகாரின் பேரில் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மோசடி வழக்கில் உதவி ஆய்வாளர் முரளிதரனை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து உதவி ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரவீன்குமார் அபினவ் உத்தரவிட்டுள்ளார்.