பனியன் நிறுவன மேலாளர் கொலை
பனியன் நிறுவன மேலாளர் கொலைpt desk

திருப்பூர் | பனியன் நிறுவன மேலாளர் கொலை - உடலை துண்டு துண்டாக வெட்டி குளத்தில் வீசிய கொடூரம்

அவிநாசி அருகே சொத்துப் பிரச்னை தொடர்பாக பனியன் நிறுவன மேலாளரை கொலை செய்து, உடலை துண்டு, துண்டாக வெட்டி குளத்தில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
Published on

செய்தியாளர்: ஹாலித் ராஜா

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே கருவலூர் காளிபாளையத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி (54). பனியன் நிறுவன மேலாளரான இவரை, கடந்த 19-ம் தேதி முதல் காணவில்லை என அவரது குடும்பத்தினர் அவிநாசி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இதையடுத்து போலீஸார் கடந்த 2 நாட்களாக விசாரணையை தீவிரப்படுத்தினர். விசாரணையில், கோவிந்தசாமியின் தம்பி மகனான ரமேஷ் என்பவர் அடிக்கடிஇவரிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் ரமேஷை பிடித்து போலீஸார் விசாரித்தனர். அப்போது, அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசவே போலீஸாருக்கு சந்தேகம் அதிகரித்துள்ளது. இதையடுத்து போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரித்தபோது, கோவிந்தசாமி, ரமேஷ் மற்றும் ரமேஷின் அக்கா ஆகியோருக்கு கூட்டாக சொத்து இருந்துள்ளது. இதனை பிரித்துத் தரும்படி, ரமேஷ், கோவிந்தசாமியிடம் கேட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கடந்த 19-ம் தேதி ரமேஷ் வீட்டுக்கு கோவிந்தசாமி சென்றுள்ளார். அப்போது சொத்து விஷயம் தொடர்பாக பேசிக்கொண்டிருக்கும்போது கோவிந்தசாமிக்கும், ரமேஷூக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது.

பனியன் நிறுவன மேலாளர் கொலை
மதுரை | தீப்பிடித்து எரிந்த குடிசை வீட்டில் கட்டியிருந்த 16 ஆடுகள் பலி – கதறியழுத மூதாட்டி

இதில், ஆத்திரமடைந்த கோவிந்தசாமி, ரமேஷின் அக்காவை தவறாக பேசியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ரமேஷ், கோவிந்தசாமியை காலால் மார்பில் மிதித்து தள்ளியுள்ளார். இதில் கீழே விழுந்த அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கோவிந்தசாமியின் சடலத்தை துண்டு துண்டாக வெட்டி, தொரவலூர் குளத்தில் வீசியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை துர்நாற்றத்துடன் மூட்டை மிதப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

கைது
கைதுகோப்புப்படம்
பனியன் நிறுவன மேலாளர் கொலை
சென்னை | பழைய கட்டடத்தின் காவலாளி அறையில் தீ விபத்து – காவலாளி சடலமாக மீட்பு

இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார், அது கோவிந்தசாமியின் உடல் பாகங்கள் என்பதை உறுதி செய்தனர். இதையடுத்து குளக்கரையிலேயே பிரேத பரிசோதனை செய்த நிலையில், ரமேஷை (43) கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுததியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com