\
திருப்பூர்: சிறுமியை திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுவன் கைது

திருப்பூர்: சிறுமியை திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுவன் கைது

திருப்பூர்: சிறுமியை திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுவன் கைது
Published on

சிறுமியை திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்து அவிநாசி அனைத்து மகளிர் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அடுத்து திருமுருகன்பூண்டி அருகே உள்ள பள்ளிபாளையம் கிராமம் பாரதியார் நகர் பகுதியை சேர்ந்த சிறுவன், தனது பெற்றோருக்கு தெரியாமல் சிறுமியை திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்ததாக திருப்பூர் சைல்டு லைன் அமைப்பினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சைல்டு லைன் அமைப்பினர் அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் விரிவு அலுவலர் புஷ்பவதியிடம் புகார் அளித்ததை அடுத்து புஷ்பவதி விசாரணை மேற்கொண்டார்.

விசாரணையில் சிறுமியை திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து புஷ்பவதி அவிநாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com