திருப்பத்தூர்: சிறுமியை கட்டாயப்படுத்தி தாலி கட்டியதாக இளைஞர் கைது
வாணியம்பாடி அருகே 14 வயது சிறுமிக்கு கட்டாய தாலி கட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்துள்ள நெக்குந்தி காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் விக்னேஷ் (26). பெங்களூருவில் கட்டட தொழிலாளியாக பணியாற்றி வரும் இவர், அதே பகுதியைச் சேர்ந்த தந்தையை இழந்து தாயுடன் வசித்து வரும் உறவினரின் மகளான 14 வயது சிறுமியுடன் கடந்த 2 ஆண்டுகளாக பேசி வந்துள்ளார்.
இதையடுத்து சிறுமியின் தாயிடம் சிறுமியை திருமணம் செய்து தருமாறு கேட்டுள்ளார். 14 வயதில் திருமணம் செய்ய முடியாது 18 வயது பூர்த்தியான பின்னர் பார்க்கலாம் என்று சிறுமியின் தாய் கூறியுள்ளார். இந்நிலையில், விடுமுறையில் ஊருக்கு வந்த இளைஞர், அந்த சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத நேரததில் கையில் தாலியுடன் வீட்டிற்குள் புகுந்து சிறுமியை கட்டாயப்படுத்தி தாலி கட்டியுள்ளார்.
இதைத் தொடாந்து ஏதும் அறியாத சிறுமி கூச்சலிட்டுள்ளார். சிறுமியின் சப்தம் கேட்டு வந்த தாய் வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்ற போலீசார் அந்த இளைஞர் மீது 14 வயது சிறுமிக்கு கட்டாய தாலி கட்டியது உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.