திருப்பத்தூர்: சாரைப்பாம்பை சமைத்து சாப்பிட்ட இளைஞர் கைது - வீடியோ வைரலான நிலையில் வனத்துறை அதிரடி

திருப்பத்தூர் அருகே சாரைப்பாம்பை கொன்று சமைத்து சாப்பிட்ட இளைஞர் கைது - சமூக வலைதளங்களில் வீடியோ வைரலான நிலையில், வனத்துறையினர் அதிரடி நடவடிக்கை.
Accused with forest dept
Accused with forest deptpt desk

செய்தியாளர்: சுரேஷ்

திருப்பத்தூர் மாவட்டம் பெருமாபட்டு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (30). இவர் நேற்று சமூக வலைதளங்களில் சாரைப்பாம்பின் தோலை உரித்து சமைப்பதற்காக சுத்தம் செய்வது போன்ற வீடியோ ஒன்றை பதிவு செய்திருந்தார்.

ராஜேஷ்குமார்
ராஜேஷ்குமார்

இதனை ஆதாரமாகக் கொண்டு திருப்பத்தூர் மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் உத்தரவின் பேரில், திருப்பத்தூர் வனச்சரக அலுவலர் சோழராஜன் தலைமையில் வனவர் மற்றும் வனப் பணியாளர்கள் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து பெருமாபட்டு கிராமத்திற்குச் சென்ற அவர்கள், ராஜேஷ் குமாரை கைது செய்தனர்.

Accused with forest dept
சென்னை: காதல் விவகாரத்தில் விபரீத முடிவெடுத்த பெண் - இளைஞரை காரில் கடத்திய 6 பேர் கைது

இதைத் தொடர்ந்து அவரிடம் நடைபெற்ற விசாரணையில், ராஜேஷ் குமார், சாரைப்பாம்பை சமைத்து சாப்பிட்டது தெரியவந்தது. இதையடுத்து ராஜேஷ்குமாரை திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com