Accused
Accused jpt desk

திருப்பத்தூர்: தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டதாக இருவர் கைது – 14 வாகனங்கள் பறிமுதல்

வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் இருசக்கர வாகன கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த 2 பேர் கைது. 14 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து வாணியம்பாடி தனிப்படை காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Published on

செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல் பிரசன்னகுமார்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி காவல் நிலைய உட்கோட்ட பகுதியில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் கொள்ளையடிக்கப்படுவதாக வாணியம்பாடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன.

அதன்பேரில் இருசக்கர வாகன கொள்ளையில் ஈடுபடும் நபர்களை பிடிக்க வாணியம்பாடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

Vehicle seized
Vehicle seizedpt desk

அப்போது, வாணியம்பாடி அடுத்த சிக்கனாங்குப்பம் பகுதியை சேர்ந்த அரவிந்த் மற்றும் ஐயப்பன் ஆகியோர் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் இருசக்கர வாகன கொள்ளையில் ஈடுப்பட்டு வந்தது தெரியவந்துள்ளது

Accused
தருமபுரி: நண்பனை அடித்துக் கொலை செய்து விட்டு நாடகமாடிய சக நண்பர்கள் - இருவர் கைது

இதையடுத்து உடனடியாக அவர்கள் இருவரையும் கைது செய்த காவல்துறையினர், இருவர் மீதும் வழக்குபதிவு செய்து, அவர்களிடமிருந்து 14 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் இக்கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையவர்களை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com