Accusedpt desk
குற்றம்
திருப்பத்தூர் | மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நேர்ந்த துயரம் - இருவர் சிறையில் அடைப்பு
ஆம்பூரில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக 2 பேரை ஆம்பூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல் பிரசன்னகுமார்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்த சற்று மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு சந்திரசேகர் என்பவர் அந்த பெண்ணை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வரவழைத்து சிறுவன் ஒருவனுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
Police stationpt desk
இதையடுத்து அந்தப் பெண், ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஆம்பூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் அந்தப் பெண் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் சந்திரசேகர் மற்றும் (17 வயது) சிறுவனை கைது செய்த போலீசார், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.