திருப்பத்தூர்: குடும்பத்தகராறில் மனைவியையும் அவரது தோழியையும் அரிவாளால் தாக்கிய நபர் கைது

திருப்பத்தூர்: குடும்பத்தகராறில் மனைவியையும் அவரது தோழியையும் அரிவாளால் தாக்கிய நபர் கைது

திருப்பத்தூர்: குடும்பத்தகராறில் மனைவியையும் அவரது தோழியையும் அரிவாளால் தாக்கிய நபர் கைது
Published on

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் குடும்பத் தகராறில் மனைவியையும் அவரது தோழியையும் அரிவாளால் வெட்டிவிட்டு தலைமறைவான நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

காமராஜபுரத்தைச் சேர்ந்த தோல் தொழிற்சாலைத் தொழிலாளி கிட்டுவுக்கு, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி மஞ்சுளா (வயது 22) என்ற மனைவியும், 2 வயதில் தீஜேஶ்ரீ என்ற பெண் குழந்தையும் உள்ளது. கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததன் காரணமாக மஞ்சுளா தனது தாய் வீட்டில் வசித்து வந்திருக்கிறார். தாய் வீட்டிலிருந்த மஞ்சுளா, தனது தோழி செல்வியுடன் பாலாற்றில் துணி துவைத்துக் கொண்டிருந்தபோது அங்கு சென்று வாக்குவாதம் செய்த கிட்டு, திடீரென மனைவியை அரிவாளால் வெட்டியுள்ளார். இதைத் தடுக்க முயன்ற தோழியும் அரிவாளால் தாக்கப்பட்டிருக்கிறார். தொடர்ந்து கிட்டு அங்கிருந்து தலைமறைவானதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

வெட்டுப்பட்ட இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்த வாணியம்பாடி நகர காவல் ஆய்வாளர் நாகராஜன் தலைமையிலான போலீசார், தொடர்ந்து தப்பியோடிய கணவன் கிட்டுவை 15  நிமிடங்களில் வாணியம்பாடி அருகே உதயேந்திரம் பகுதியில் உள்ள சர்ச் வீதியில் கைது செய்து வழக்குப்பதிவுக்குப் பின் சிறையில் அடைத்தனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com