நாங்குநேரி: அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை மீது தாக்குதலில் ஈடுபட்ட ஆசிரியை!

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே அரசு பள்ளி தலைமை ஆசிரியையை தாக்கி பெண் ஆசிரியை ஒருவர் தகராறில் ஈடுபட்டார்.

நெல்லை நாங்குநேரி அருகே தளபதி சமுத்திரம் என்ற பகுதியில் இயங்கி வரும் அரசு பள்ளியில் வேதியியல் ஆசிரியையாக பணியாற்றி வரும் ஸ்டெல்லா ஜெயசெல்வி என்பவர், பள்ளியில் பயிலும் மாணவ- மாணவிகளை அவதூறாக பேசுவதுடன், தகாத வார்த்தைகளில் திட்டி வந்துள்ளார். இதுதொடர்பாக மாணவியொருவர் அளித்த தகவலின் பேரில், தலைமை ஆசிரியையான ரெத்தின ஜெயந்தியிடம் அவரது பெற்றோர் புகார் அளித்துள்ளனர். ஆசிரியை ஸ்டெல்லா மீது தொடர் புகார்கள் வந்ததால், உரிய விளக்கமளிக்க தலைமை ஆசிரியர் ரெத்தின ஜெயந்தி அவரிடம் கூறியுள்ளார்.

தளபதி சமுத்திரம்
தளபதி சமுத்திரம்pt web

இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியை ஸ்டெல்லா, தலைமை ஆசிரியரை தாக்கியதுடன், அவர் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியையும் பறித்துள்ளார்.

தளபதி சமுத்திரம்
நாங்குநேரி சம்பவம்: துறைரீதியான விசாரணை குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநரிடம் அறிக்கை சமர்பிப்பு!

தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், ஆசிரியை ஸ்டெல்லாவிடம் விசாரணை நடத்தி, அவரிடம் இருந்த தங்க சங்கிலியை மீட்டு அறிவுரை வழங்கினர். சம்பவம் தொடர்பாக ஆசிரியை ஸ்டெல்லா மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க தலைமை ஆசிரியர் ரெத்தின ஜெயந்தி பரிந்துரை செய்யுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com