பாஜக நிர்வாகி செல்வகுமார்
பாஜக நிர்வாகி செல்வகுமார் pt desk

நெல்லை: தோட்டத்தில் வேலை பார்த்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை - பாஜக நிர்வாகி மீது வழக்குப் பதிவு

இராதாபுரம் அருகே தோட்டத்தில் வேலை பார்த்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாஜக நிர்வாகி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Published on

செய்தியாளர்: ராஜூகிருஷ்ணா

நெல்லை மாவட்டம் இராதாபுரம் அருகே உள்ள தெற்கு குமிளம்பாடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (37). இவர், பாஜக மாவட்ட ஊடகப்பிரிவு தலைவராக இருந்து வருகிறார். இந்நிலையில், குமிளம்பாடு கிராமத்தில் அமைந்துள்ள செல்வகுமாரின் தோட்டத்தில் வேலை செய்வதற்காக அதே பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் சென்றுள்ளார்.

பாலியல் தொந்தரவு
பாலியல் தொந்தரவுfile

அப்போது அங்கு சென்ற செல்வகுமார், அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம் பெண் அங்கிருந்து தப்பிச் சென்று இராதாபுரம் போலீசில் புகார் செய்துள்ளார். இதன் பெயரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து செல்வகுமாரை தேடி வருகின்றனர். செல்வகுமார் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

பாஜக நிர்வாகி செல்வகுமார்
திண்டுக்கல் மாநகராட்சியில் ரூ.4.66 கோடி பணம் கையாடல் வழக்கு: இ-சேவை மைய உரிமையாளர் கைது
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com