திருச்செங்கோடு: 10ம் வகுப்பு படித்த சிறுமி 3 மாத கர்ப்பம் - சித்தப்பா போக்சோவில் கைது

திருச்செங்கோடு: 10ம் வகுப்பு படித்த சிறுமி 3 மாத கர்ப்பம் - சித்தப்பா போக்சோவில் கைது
திருச்செங்கோடு: 10ம் வகுப்பு படித்த சிறுமி 3 மாத கர்ப்பம் - சித்தப்பா போக்சோவில் கைது

சித்தி வீட்டில் இருந்த சிறுமிக்கும் சித்தப்பாவுக்கும் இடையே ஏற்பட்ட திருமணத்தை மீறிய உறவில் சிறுமி கர்ப்பமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் சித்தப்பா போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

திருச்செங்கோட்டை அடுத்துள்ள வாய்கால் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் தறித்தொழிலாளியான புவனேஸ்வரன் (34). இவரது மனைவியின் சகோதரி ஈரோட்டில் வசித்து வருகிறார். இவருக்கும் இவரது கணவருக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இவரது கணவரை பிரிந்து 2வது திருமணம் செய்து கொண்டு ஈரோட்டில் வசித்து வருகிறார். அவருக்கு ஒரு மகள் உள்ளார்.

இந்நிலையில், இவரது மகள், அதே பகுதியை சேர்ந்த 12ம் வகுப்பு படிக்கும் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த அந்த பெண்ணின் தாயார் அவரை திருச்செங்கோடு செங்கோடம் பாளையம் வாய்க்கால் தோட்டத்தில் வசிக்கும் தனது சகோதரி வீட்டிற்கு அனுப்பி உள்ளார். கடந்த இரண்டு வருடமாக தனது சித்தி வீட்டில் இருந்து வந்த சிறுமிக்கும் அவரது சித்தப்பா புவனேஸ்வரனுக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன் வயிறு வலிப்பதாக சிறுமி கூறவே, அவரை புவனேஸ்வரனின் மனைவி தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர் சிறுமி 3மாத கர்ப்பிணியாக இருப்பது தெரிவித்துள்ளனர். சட்ட விரோத கருக்கலைப்பு செய்ய விரும்பாத மருத்துவர் இது குறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.

அவர்கள் இதுகுறித்து திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தவகல் கொடுத்து விசாரிக்க சொன்னதன் பேரில் புவனேஸ்வரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த மகளிர் காவல்நிலைய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com