\
சென்னை ஐஐடி காவலாளியிடம் வழிப்பறியில் ஈடுபட முயன்ற மூவர் கைது

சென்னை ஐஐடி காவலாளியிடம் வழிப்பறியில் ஈடுபட முயன்ற மூவர் கைது

சென்னை ஐஐடி காவலாளியிடம் வழிப்பறியில் ஈடுபட முயன்ற மூவர் கைது
Published on
சென்னையில் ஐஐடி காவலாளியை கடுமையாக தாக்கி விட்டு தப்பிச் சென்ற வழக்கில் 17 வயது இளஞ்சிறார் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
பெரம்பூர் ரயில்வே குடியிருப்பில் வசிக்கும் வட மாநிலத்தைச் சேர்ந்த ஆஷிஷ் சிங் சென்னை ஐ.ஐ.டி-யில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இரு தினங்களுக்கு முன் அவர் சைக்கிளில் கீழ்ப்பாக்கம் குருசாமி மேம்பாலம் வழியாகச் சென்று கொண்டிருந்தபோது வழிமறித்த 3 பேர் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் மற்றும் செல்போனைக் கேட்டுள்ளனர்.
ஆஷிஷ் தர மறுக்கவே தலையில் மூன்று இடங்களில் கத்தியால் தாக்கிவிட்டு அந்த கும்பல் தப்பியோடியது. இதையடுத்து அவர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர், டேனியல், சரண்ராஜ் மற்றும் 17 வயது சிறுவன் ஒருவனை கைது செய்துள்ளனர்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com