\
"சாப்பிட்டதற்கு காசு கேட்பாயா" - சென்னையில் ஹோட்டலுக்கு நேர்ந்த பரிதாப நிலை

"சாப்பிட்டதற்கு காசு கேட்பாயா" - சென்னையில் ஹோட்டலுக்கு நேர்ந்த பரிதாப நிலை

"சாப்பிட்டதற்கு காசு கேட்பாயா" - சென்னையில் ஹோட்டலுக்கு நேர்ந்த பரிதாப நிலை
Published on

சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்க மறுத்ததை தட்டிக் கேட்டதால் ஓட்டல் அடித்து சூறை - சகோதரர்கள் உள்பட 3பேர் கைது செய்யப்பட்டனர்.

அம்பத்தூர், புதூர் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (35). இவர், அதே பகுதியில் அசைவ ஓட்டல் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு பிரேம்குமாரும் அவரது மனைவி இந்துஜாவும் ஓட்டலில் அமர்ந்து வியாபாரத்தை கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது, புதூர், புதிய அண்ணா நகர், 1வது தெருவைச் சேர்ந்த ராஜேஷ் (38) என்பவர் குடிபோதையில் ஓட்டலுக்கு சாப்பிட வந்தார்.

பின்னர், அவர் சாப்பிட்டு விட்டு ரூ.230 பணம் கொடுக்காமல் தகராறு செய்துள்ளார். இதனையடுத்து, அவரை பிரேம்குமார் தட்டிக் கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் ராஜேஷ் வீட்டுக்குச் சென்று தனது அண்ணன் சுரேஷ் (40) மற்றும் நண்பர் கோகுல் (27) ஆகியோரை அழைத்துக்கொண்டு ஓட்டலுக்கு வந்து உள்ளார்.

இதையடுத்து அவர்கள் மூவரும் சேர்ந்து பில்லிங் மெஷின், லேப்டாப், ஷோகேஷ் ஆகியவற்றை கத்தியால் அடித்து சேதப்படுத்தினர். மேலும், இந்துஜாவை அசிங்கமாகத் திட்டி கீழே தள்ளிவிட்டுள்ளனர். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. இது குறித்து பிரேம்குமார் அம்பத்தூர் காவல் நிலையத்தில் இன்று புகார் செய்தார்.

புகாரை அடுத்து இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையிலான போலீசார், வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். பின்னர், போலீசார் அவர்கள் மூவரையும் கைது செய்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com