நாகர்கோவில்: வனவிலங்கு பாகங்களால் ஆன கைவினைப் பொருட்கள் விற்பனை; 3 பேர் கைது

நாகர்கோவில்: வனவிலங்கு பாகங்களால் ஆன கைவினைப் பொருட்கள் விற்பனை; 3 பேர் கைது
நாகர்கோவில்: வனவிலங்கு பாகங்களால் ஆன கைவினைப் பொருட்கள் விற்பனை; 3 பேர் கைது
நாகர்கோவில் அருகே வனவிலங்கு பாகங்களால் ஆன கைவினைப் பொருட்களை விற்பனை செய்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே அழகப்பபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மத்திய அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படுவதாக மத்திய வன உயிரின குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டு பொருட்கள் வாங்குவது போன்று கண்காணித்த அதிகாரிகள், குமரி மாவட்ட வனத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் அளித்து அழகப்பபுரம் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அதில் வாடகை வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த, தடை செய்யப்பட்ட பொருட்களான மான் கொம்பு, ஆமை ஓடு, யானை தந்தத்தினால் செய்யப்பட்ட கைவினைப் பொருட்கள், சந்தன மரத்தினால் ஆன சிலைகள், முள்ளம்பன்றி முட்களால் செய்யப்பட்ட பெட்டி மற்றும் கடல் சங்கு போன்ற பொருட்கள் அனுமதியின்றி விற்பனை செய்வது உறுதி செய்யப்பட்டது.
பின்னர் விற்பனையில் ஈடுபட்ட கன்னியாகுமரி மாவட்டம் ஜேம்ஸ் டவுன் பகுதியை சேர்ந்த சாம்ராஜ் மற்றும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அன்றோ போராஸ் ,சங்கர் ஆகிய மூன்று பேரை மத்திய வன உயிரின குற்ற தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட வனத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர்களின் தகவலின் பேரில் அவர்களுக்கு இப்பொருட்களை விற்பனை செய்த நபர்களையும் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com