\
டெக்ஸ்டைல்ஸ் அதிபரிடம் கத்தியைக் காட்டி பணம் கேட்டு மிரட்டியதாக 3 பேர் கைது

டெக்ஸ்டைல்ஸ் அதிபரிடம் கத்தியைக் காட்டி பணம் கேட்டு மிரட்டியதாக 3 பேர் கைது

டெக்ஸ்டைல்ஸ் அதிபரிடம் கத்தியைக் காட்டி பணம் கேட்டு மிரட்டியதாக 3 பேர் கைது
Published on: 

இலுப்பூரில் டெக்ஸ்டைல்ஸ் அதிபரை கடத்தி கத்தி முனையில் பணம் கேட்டு மிரட்டிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் பாலாஜி டெக்ஸ்டைல்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருபவர் ராஜஸ்தானை சேர்ந்த சூரஜ்கான் சர்மா. இவர் தனது நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களை காரில் ஏற்றிக்கொண்டு அவர்கள் வீட்டில் இறக்கிவிட்டு விட்டு திரும்பி வந்தார். அப்போது காரை வழிமறித்த முனியாண்டி (45), சசிக்குமார் (34), நாகராஜன் (35), யோகானந்தம் (32) ஆகிய நான்கு பேர் சூரஜ்கான் சர்மாவிடம் கத்தியைக் காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

இதனையடுத்து அவர்களிடம் தப்பி வந்த சூரஜ்கான் சர்மாவின் அலைபேசிக்கு அழைத்த அந்த கும்பல், பணம் கேட்டு தொடர்ந்து மிரட்டியுள்ளனர். இதனை அடுத்து நடந்த விபரம் குறித்து இலுப்பூர் காவல் நிலையத்தில் சூரஜ்கான் சர்மா புகாரை அளித்தார். இதையடுத்து புகாரின் பேரில் முனியாண்டி, சசிக்குமார், நாகராஜன் ஆகிய 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள யோகானந்தத்தை தேடிவருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com