குற்றம்
சென்னையில் துப்பாக்கியால் சுட்டு ஒரே குடும்பத்தின் மூவர் கொலை
சென்னையில் துப்பாக்கியால் சுட்டு ஒரே குடும்பத்தின் மூவர் கொலை
சென்னை யானை கவுனியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் தந்தை தலில், தாய் புஷ்பா பாய், மகன் ஷீத்தல் ஆகியோரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. குடும்ப பிரச்னை காரணமாக துப்பாக்கியால் சுட்டு 3 பேரும் கொலை செய்யப்பட்டனரா என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு குற்றவாளிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். சவுக்கார்பேட்டையில் பைனான்ஸ் தொழில் செய்துவரும் தலில்சந்த் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் என போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

