ஆந்திராவில் ஏ.டி.எம் கொள்ளையில் ஈடுபட்ட மூவர் கைது
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் ஏ.டி.எம். கொள்ளையில் ஈடுபட்ட மூவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த மாதம் செப்டம்பர் 3ஆம் தேதி சித்தூர் மாவட்டம் நக்கலதின்னே பகுதியில் எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்த அடையாளம் தெரியாத நபர்கள், 22 லட்ச ரூபாயை கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த சித்தூர் காவல் துறையினர் கொள்ளையர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக ஹரியானா மாநிலத்தை சேர்ந்த முக்தாஸ்கான், அசேன், யாகூப் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பின்பு அவர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் இந்த சம்பவத்தில் தொடர்புள்ள 6 பேர் தலைமறைவாக உள்ளது கண்டிப்பிடிக்கப்பட்டது. அவர்களை பிடிப்பதற்காக காவல் துறையினர் தனி படை அமைத்து தேடுதல் வேட்டையை ஆரம்பித்துள்ளனர்.