
“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!
IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew
சென்னை கொரட்டூரில் ஆள்மாறாட்டம் செய்து ரூ.1 கோடி மதிப்புள்ள நிலத்தை விற்பனை செய்த பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை அண்ணாநகர் கிழக்கு 1-வது பிளாக், 10-வது தெருவைச் சேர்ந்தவர் கண்ணப்பன் (70). இவரது மனைவி அருணா (63). இவர்களது இரு மகன்களும் அமெரிக்காவில் வசிக்கின்றனர். இதனால் இத்தம்பதியினர் கடந்த 2 ஆண்டுகளாகவே அமெரிக்காவில் மகன்களுடன் தங்கி வந்துள்ளனர்.
கடந்த 1991 ஆம் ஆண்டு கண்ணப்பன் தனது மனைவி அருணா பெயரில் அம்பத்தூர் அருகே புத்தகரம் ஸ்ரீ லட்சுமி அம்மன் நகரில் 1,800 சதுரடி நிலத்தை வாங்கி அம்பத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்துவைத்திருந்தார்.
இந்த நிலத்தை, கடந்த ஜனவரி மாதம் கண்ணப்பன் ஆன்லைன் மூலமாக சரி பார்த்தபோது அந்நிலத்தை லோகநாதன் என்பவருக்கு அருணா என்ற பெயரில் வேறுயாரோ விற்பனை செய்திருப்பது தெரியவந்தது. உடனடியாக இது குறித்து அருணா ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் செய்தார். ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், நில அபகரிப்பு தடுப்புச் சிறப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் லாரன்ஸ் தலைமையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதன்முடிவில் அம்பத்தூர் அருகே புத்தகரம் பகுதியை சேர்ந்த ஹரிகோபால் மற்றும் மாரிமுத்து ஆகியோர் சேர்ந்து, புழல் காவாங்கரை மகாவீரர் தோட்டத்தைச் சேர்ந்த லலிதா என்ற பெண்ணை அருணா என்று ஆள்மாறாட்டம் செய்து லோகநாதன் என்பவருக்கு நிலத்தை விற்பனை செய்திருப்பது தெரியவந்தது.
மோசடி செய்யப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.1 கோடி என்று கூறப்படுகிறது. இதையடுத்து போலீஸார் லலிதா, ஹரிகோபால், மாரிமுத்து ஆகிய மூவரையும் கைது செய்து, திருவள்ளூர் நில அபகரிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.