சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்து இருப்பதாக தொலைபேசியில் மிரட்டல்!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்து இருப்பதாக தொலைபேசியில் மிரட்டல்!
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்து இருப்பதாக தொலைபேசியில் மிரட்டல்!

சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் நேற்று முன்தினம் மாலை கால் செய்து சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும் இன்னும் சற்று நேரத்தில் அது வெடிக்க இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், தாம்பரத்தில் உள்ள வெங்கடேஸ்வரா லாட்ஜில் அறை எடுத்து தங்கியுள்ள அமீர் என்ற நபர் தான் வெடிகுண்டு வைத்ததாகவும் கூறி போன் காலை துண்டித்துள்ளார்.

இதனையடுத்து பூக்கடை துணை ஆணையர் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்பது தெரிய வந்தது. மேலும், விசாரணையில் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பூக்கடை சி.பி சாலை பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரை கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணையில் கைது செய்யப்பட்ட ரவிச்சந்திரன் தாம்பரத்தில் உள்ள வெங்கடேஸ்வரா லாட்ஜில் ஊழியராக பணிபுரிந்து வந்ததும் நன்னடத்தை விதிமீறல் காரணமாக லாட்ஜின் மேனேஜர் அமீர், ரவிச்சந்திரனை வேலையை விட்டு சமீபத்தில் நீக்கியுள்ளதும் தெரியவந்துள்ளது.

இதனால் லாட்ஜ் மேனேஜர் அமீரை பழி வாங்குவதற்காக ரவிச்சந்திரன் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்ட ரவிச்சந்திரனை போலீசார் சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com