பணம் கேட்டு மிரட்டல்: பீர் பாட்டிலால் வாலிபரின் மண்டையை உடைந்த 3பேர் கைது

பணம் கேட்டு மிரட்டல்: பீர் பாட்டிலால் வாலிபரின் மண்டையை உடைந்த 3பேர் கைது

பணம் கேட்டு மிரட்டல்: பீர் பாட்டிலால் வாலிபரின் மண்டையை உடைந்த 3பேர் கைது
Published on

பணம் கேட்டு மிரட்டி வாலிபரை பீர் பாட்டிலால் தாக்கிய 3 பேர் கொடுங்கையூரில் கைது செய்யப்பட்டனர்.

சென்னை கொடுங்கையூர் எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் கௌதம் (19). இவர் தனியார் பாலிடெக்னிக்கில் படித்து வருகிறார். இவர், தீபாவளியன்று தனது வீட்டிற்கு நடந்து செல்லும்போது 3 இளைஞர்கள் இவரை மடக்கி இவரிடம் பணம் இருக்கிறதா என்று கேட்டுள்ளனர். பணம் ஏதும் இல்லை என்று கூறியதால் நாங்கள் தீபாவளியை கொண்டாட வேண்டும் மது வாங்கி தருமாறு கூறி உள்ளனர்.


அதற்கு கௌதம் மறுத்து வீட்டிற்கு செல்லும்போது அவரை பின்தொடர்ந்து சென்ற 3 பேரும் பீர் பாட்டிலால் பலமாக அவரை தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த கௌதம் அரசு ஸ்டான்லி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு தலையில் 20 தையல்கள் போடப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.


இந்த சம்பவம் தொடர்பாக கொடுங்கையூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொடுங்கையூர் ஆர்.ஆர் நகர் பகுதியை சேர்ந்த சுரேஷ் (20), ஜான்சன் (21), விமல் (20) ஆகிய 3 பேரையும் கைது செய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com