கொத்தனாரை வெட்டிக் கொலை செய்த இளைஞர் கைது
கொத்தனாரை வெட்டிக் கொலை செய்த இளைஞர் கைதுpt desk

தூத்துக்குடி: மது போதையில் ஏற்பட்ட தகராறு – கொத்தனாரை வெட்டிக் கொலை செய்த இளைஞர் கைது

வல்லநாடு அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில் கொத்தனாரை வெட்டிக் கொலை செய்த இளைஞரை கைது செய்துள்ள போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Published on

செய்தியாளர்: பே.சுடலைமணி செல்வன்

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள அனவரதநல்லூரைச் சேர்ந்த சுடலைமாடன் என்பவரது மகன் மகாராஜன் (35). இவருக்கு சுடலைமாடி என்ற மனைவியும் 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், கொத்தனார் வேலை செய்து வந்த சுடலைமாடன், அதே பகுதியைச் சேர்ந்த சுப்ரமணி என்பவரது மகன் முத்துக்குமார் (19) என்பவரும் நேற்று இரவு மதுகுடிக்கச் சென்றுள்ளனர்.

போலீசார் விசாரணை
போலீசார் விசாரணைpt desk

அப்போது குடிபோதையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த முத்துக்குமார் அவரை அரிவாளால் மகாராஜனை வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த மகராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முறப்பநாடு போலீசார் மகாராஜன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொத்தனாரை வெட்டிக் கொலை செய்த இளைஞர் கைது
விழுப்புரம்: பக்கிங்காம் கால்வாயில் தவறி விழுந்த 3 சகோதரர்கள் - ஒருவர் சடலமாக மீட்பு

இதைத் தொடர்ந்து இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக முத்துக்குமாரை கைது செய்துள்ள போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com