குற்றம்
தூத்துக்குடி: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் போக்சோவில் கைது
தூத்துக்குடி: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் போக்சோவில் கைது
விளாத்திகுளம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வேப்பலோடை கழுகாசலபுரத்தைச் சேர்ந்தவர் மணி (52). இவர், தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டுடிருந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து தவறாக நடக்க முயன்றுள்ளர். அப்போது சிறுமி மணியை தள்ளிவிட்டு அங்கிருந்து சத்தமிட்டவாறு வெளியே ஓடிவந்துள்ளார்.
இதனை பார்த்த அந்த சிறுமியின் தாய், சிறுமியிடம் நடந்தவற்றை கேட்டறிந்துள்ளார். இதையடுத்து அந்த சிறுமியின் தாய் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மணியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.