தூத்துக்குடி: முன்பகை காரணமாக பஞ்சாயத்து தலைவர் வெட்டிக் கொலை

தூத்துக்குடி: முன்பகை காரணமாக பஞ்சாயத்து தலைவர் வெட்டிக் கொலை

தூத்துக்குடி: முன்பகை காரணமாக பஞ்சாயத்து தலைவர் வெட்டிக் கொலை
Published on

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே பழிக்கு பழியாக பஞ்சாயத்து தலைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அகரம் கிராமத்தைச் சேர்ந்த பொன்சீலன் என்பவர் பஞ்சாயத்து தலைவராக இருந்தார். இக்கிராமத்தில் கொடை விழா நடைபெற்ற நிலையில், துணைத்தலைவர் தவசிகனி வீட்டிற்கு அவர் கறி விருந்துக்கு சென்ற நிலையில், அப்போது அங்கு மறைந்திருந்த கும்பல் பொன்சீலனை வெட்டியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

விசாரணையில் கடந்த 2017 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த லெனின் என்பரை பொன்சீலன் உள்பட 14 பேர் வெட்டிக்கொலை செய்ததாகவும், அதற்கு பழிவாங்கும் செயலாக இக்கொலை அரங்கேறி இருக்கலாம் எனவும் தெரிகிறது. இதனிடையே லெனின் தம்பிகள் மற்றும் நண்பர்கள் என 4 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com