\
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்
Published on: 

10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை திருவாரூர் மாவட்ட காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஷேக் தாவூத் என்பவர் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாக திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு போக்சோ சட்டத்தின்கீழ் நாகை மாவட்ட சிறையில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில் ஷேக்தாவூத் குண்டர் சட்டத்தில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இதுபோல் தவறுகள் யாரேனும் செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் எச்சரிக்கை செய்துள்ளார்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com