குற்றம்
திருவாரூர்: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: ஓய்வுபெற்ற அரசு ஊழியர் போக்சோவில் கைது
திருவாரூர்: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: ஓய்வுபெற்ற அரசு ஊழியர் போக்சோவில் கைது
திருத்துறைப்பூண்டி அருகே மூன்றாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஒய்வு பெற்ற அரசு ஊழியரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள குண்ணலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகசு ந்தரம் (62). இவர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.
இந்தநிலையில் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு சைகை மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனை தனது பெற்றோரிடம் சிறுமி தெரிவித்துள்ளார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்
இதையடுத்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சண்முக சுந்தரத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.