மனைவியை கொலை செய்த கணவன் கைது
மனைவியை கொலை செய்த கணவன் கைதுpt desk

தி.மலை: குடும்பத் தகராறில் மனைவியை கொடூரமாக கொலை செய்து காட்டில் வீசிய கணவன் கைது!

திருவண்ணாமலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் மனைவியை கொலை செய்து துண்டு துண்டுகளாக வெட்டி காட்டுப் பகுதியில் வீசிச் சென்ற கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Published on

செய்தியாளர்: மகேஸ்

திருவண்ணாமலை நகராட்சிக்குட்பட்ட கோபுரம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கோபி. இவர் ஆட்டோ மற்றும் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் நிலையில் இவருக்கும் கவரிங் கடையில் பணிபுரிந்து வந்த சரண்யாவிற்கும், கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இத்தம்பதிக்கு ஒரு மகளும் இரண்டு மகன்களும் உள்ளனர். இந்நிலையில் கோபி - சரண்யா இருவருக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

கோபி
கோபிpt desk

இதில் கடைசியாக தீபாவளியன்று கணவன் மனைவிக்கு இடையே பெரிய தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. தீபாவளி தினத்தன்று சரண்யாவின் தாயார் காவேரி, வாழ்த்து கூற செல்போனில் சரண்யாவை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த காவேரி தன் மகளின் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார். அக்கம் பக்கத்தில் விசாரணை செய்த போது கடந்த சில நாட்களாகவே மகள் வீட்டில் இல்லை என தெரியவந்துள்ளது.

மனைவியை கொலை செய்த கணவன் கைது
சென்னை: கதவை திறந்தும் வராத லிப்ட் - கால் தவறி கீழே விழுந்த காவலாளி உயிரிழப்பு

இதையடுத்து சந்தேகமடைந்த காவேரி, திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். கணவர் கோபியிடம் விசாரிப்பதற்காக அவரது வீட்டிற்கு போலீசார் சென்றுள்ளனர். போலீசாரை கண்டதும் தப்பிக்க முயற்சித்துள்ளார் கோபி. உடனடியாக உஷாரான காவல்துறை, கோபியை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது.

Arrested
Arrestedfile

விசாரணையில், தனக்கும் தனது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் மனைவியை கொலை செய்து உடலை 8 துண்டுகளாக வெட்டி சூட்கேஸில் அடைத்து கிருஷ்ணகிரி அருகே உள்ள காட்டில் வீசிவிட்டு சென்றதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com